Findicus-Web-logo

பயனர் (விற்பனையாளர்) ஒப்பந்தம்

எனது கால்நடை / கோழி / செல்லப்பிராணியின் உரிமையாளராகிய நான், அவற்றை ஃபின்டிகஸ் செயலி மூலம் விற்க விரும்புகிறேன்.

ஃபின்டிகஸ் செயலியில் விற்பனைக்கு இடுகையை உருவாக்க கால்நடை / கோழி / செல்லப்பிராணிகளின் உரிமையாளரைத் தவிர வேறு யாருக்கும் உரிமை இல்லை என்பதை நான் அறிவேன்.

விற்பனைக்கு உள்ள கால்நடை / கோழி / செல்லப்பிராணிகளின் முழுமையான மற்றும் உண்மையான தகவலுடன், தெளிவான மற்றும் சமீபத்திய படங்களை பதிவேற்ற ஒப்புக்கொள்கிறேன்.

விற்பனைக்கு உள்ள எனது கால்நடை / கோழி / செல்லப்பிராணிகளுக்கான நியாயமான விலையை குறிப்பிட / கேட்க ஒப்புக்கொள்கிறேன்.

In-app chat/ தொலைபேசி அழைப்பு/ வாட்ஸ்அப் அழைப்பு/ நேரடி வருகை மூலம் வாங்குபவர் செய்யும் விசாரணைகளுக்கு சரியாகப் பதிலளிப்பேன் என உறுதியளிக்கிறேன்.

விற்பனைக்கு இருக்கும் கால்நடை / கோழி / செல்லப்பிராணிகளைப் பார்க்க வாங்குபவர் நேரில் அல்லது வீடியோ அழைப்பு மூலம் பார்வையிட அனுமதிக்க ஒப்புக்கொள்கிறேன்.

கால்நடை / கோழி / செல்லப்பிராணிகளை விற்ற பிறகு அல்லது ஃபின்டிகஸ் செயலிக்கு தகவல் தெரிவிக்க ஒப்புக்கொள்கிறேன்.

ஃபின்டிகஸ் செயலி என்பது கால்நடை / கோழி / செல்லப்பிராணிகளை விற்பவர்கள் மற்றும் வாங்குபவர்களை இணைக்கும் டிஜிட்டல் தளம் என்பதை நான் முழுமையாக அறிவேன். விற்பனையாளராகிய நான், விற்பனைக்கு உள்ள கால்நடை / கோழி / செல்லப்பிராணிகளை பட்டியலிட, ஃபின்டிகஸ் செயலியை பயன்படுத்துவேன், மேலும் ஃபின்டிகஸ் செயலி வாங்குபவர்களுக்குத் தெரிவுநிலையை உருவாக்கும். பட்டியலிடப்பட்ட கால்நடை / கோழி / செல்லப்பிராணிகள் விற்கப்படாமல் போனால், ஃபின்டிகஸ் செயலி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பொறுப்பாகாது என்பதை நான் முழுமையாக ஒப்புக்கொள்கிறேன் மற்றும் ஏற்றுக்கொள்கிறேன்.

பணம் செலுத்தும் முறை, பணம் செலுத்தும் விதிமுறைகள் மற்றும் கால்நடை / கோழி / செல்லப்பிராணிகளை விற்பனை செய்த பிறகு கொண்டு செல்வதற்கு முறையான ஏற்பாடுகளைச் செய்வது எனக்கும், வாங்குபவருக்கும் உள்ள பரஸ்பர பொறுப்பு என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

இந்திய அரசாங்கத்தின் அனைத்து விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு நான் கட்டுப்படுவதை ஒப்புக்கொள்கிறேன்.

பயனர் (வாங்குபவர்) ஒப்பந்தம்

கால்நடைகள் / கோழிகள் / செல்லப்பிராணிகளின் விலை, அளவு, இனம், இருப்பிடம், வயது, தரம், எடை மற்றும் பிற விவரங்களின் துல்லியத்தை, கொள்முதல் முடிவு எடுப்பதற்கு முன் நேரடியாகவோ / in-app chat/ தொலைபேசி / WhatsApp அழைப்பு/ வீடியோ அழைப்பு மூலமோ சரிபார்க்க ஒப்புக்கொள்கிறேன்.

ஃபின்டிகஸ் செயலி எனும் டிஜிட்டல் தளம் விற்பனைக்கு உள்ள கால்நடைகள் / கோழிகள் / செல்லப்பிராணிகள் பற்றிய தகவலையும் அந்தந்த உரிமையாளரின் தொடர்பு விவரங்களையும் பகிர்ந்துகொள்கிறது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன் மற்றும் ஏற்றுக்கொள்கிறேன்.

கொள்முதல் முடிவை எடுப்பதற்கு முன், விற்பனைக்கு இருக்கும் பண்ணை / கால்நடைகள் / கோழிகளை / செல்லப்பிராணிகளைப் பார்வையிட அனுமதிப்பது விற்பனையாளரின் பொறுப்பு என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

In-app chat / தொலைபேசி அழைப்பு/ வாட்ஸ்அப் அழைப்பு/ வீடியோ அழைப்பு/ நேரடி வருகை மூலம் நான் செய்யும் விசாரணைகளுக்கு சரியாக பதிலளிப்பது விற்பனையாளரின் / உரிமையாளரின் பொறுப்பாகும் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

பணம் செலுத்தும் முறை, கட்டணம் செலுத்தும் விதிமுறைகள் மற்றும் பிற முறையான ஏற்பாட்டைச் செய்வது எனக்கும், விற்பனையாளருக்கும் உள்ள பரஸ்பர பொறுப்பு என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

இந்திய அரசாங்கத்தின் அனைத்து விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு நான் கட்டுப்படுவதை ஒப்புக்கொள்கிறேன்.

Scroll to Top